வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 7 பிப்ரவரி, 2013

பொதுநலவாய உச்சி மாநாட்டை மாற்ற வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பு


லங்கை அரசாங்கம் மனித உரிமைகள் விடயத்தில் உடனடியாக, தெளிவாக தெரியக்கூடிய அர்த்தமுள்ள முன்னேற்றத்தை காட்டாதுவிடின், 2013ஆம் ஆண்டு நவம்பரில் நடக்கவுள்ள அதன் பொதுநலவாய உச்சி மாநாட்டை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பு நிறுவகம் தெரிவித்துள்ளது.
பொதுநலவாய அரசாங்க தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளது. இந்த கூட்டம் பற்றி ஆராய்வதற்காக பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா பெப்ரவரி 10, 2013இல் இலங்;கை வரவுள்ளார். தமிழீழ விடுதலை புலிகளுடனான யுத்தத்தின் இறுதி மாதங்களின்போது 2009இல் அரசாங்கப் படைகளினால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான உரிமை மீறல்களை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம் தவறியுள்ளது. இந்த யுத்தத்தின்போது 40,000 பொதுமக்கள் இறந்ததாக ஐக்கிய நாடுகள் கணிப்பிட்டுள்ளது. 2009இலிருந்து மனித உரிமை மோசமடைந்து வருவதற்கு அரசாங்கம் பொறுப்பாகவுள்ளது. இவற்றுள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படல், சிவில் சமூகத்துக்கு எதிரான பயமுறுத்தல்கள், இலங்கையின் ஜனநாயகத்தை மறுத்தல், நீதித்துறைக்கு எதிரான நடவடிக்கைகள் என்பன அடங்குகின்றன. மனித உரிமைகள், ஜனநாயக சீர்திருத்தம் ஆகிய பொதுநலவாயத்தின் கொள்கைகளை வெளிப்படையாக உதாசீனம் செய்வதன் மூலம், இந்த முக்கிய நிகழ்வை நடத்துவதற்கான தகுதியில் இலங்கை குறைவுபட்டுள்ளது என ஆசியாவுக்கான பணிப்பாளர் பிறாட் அடெம்ஸ் கூறியுள்ளார். உரிமை மீறல்கள், குற்றம் இழைத்தவர்களை தண்டிக்காதுவிடல் ஆகியவற்றை ஆராய்ந்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதுவிட்டால் பொதுநலவாயத்தின் விழுமியங்களை ஒடுக்கிக்கொண்டே இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச அங்கீகாரம், பொதுநலவாயத்துக்கும் அதன் அங்கத்துவ நாடுகளுக்கும் சங்கடமான நிலைமையை தோற்றுவிக்கும் என அவர் கூறினார். இலங்கையில் 2013 உச்சி மாநாட்டை நடத்த அனுமதிப்பதற்கு பின்வரும் இலக்குகளை அடைவது முன் நிபந்தனைகளாக்கப்பட வேண்டும் என 2011இல் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் வேறு உள்நாட்டு, சர்வதேச மனித உரிமைகள் குழுக்கள் பொதுநலவாய அமைச்சு மட்ட நடவடிக்கைக்குழுவிடம் வலியுறுத்தின. இந்த இலக்குகளில் இன்று பொருத்தப்பாடு உடையதாக உள்ளன. அவையாவன: இலங்கை அரசாங்கம் ஒப்பமிட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் ஒப்பந்தங்களை இலங்கையில் அர்த்தமுள்ள முறையில் நடைமுறைப்படுத்தல் சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு அமைவதாக சகல சட்டங்களையும் கொண்டுவரும். சகல இலங்கை மக்களும் கௌரவத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்படுவதை உறுதி செய்தல். அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள சகல அடிப்படை உரிமைகளை சகல மக்களும் அனுபவித்தல். வலுவேறாக்கத்தை உறுதி செய்யும் அரசியலமைப்பு ஏற்பாடுகளை மீளக் கொண்டுவருதல் அரசாங்கத்தின் 3 அங்கங்களினதும் சுயாதீனத்தை மீளக்கொணர்தல் மனித உரிமை ஆணைக்குழு போன்ற முக்கிய அரசாங்க நிறுவனங்களின் சுயாதீனத்தை மீளக்கொணர்தல் ஊடகவியலாளர்கள் சிவில் சமூக குழுக்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களை பாதுகாப்பதற்கான வினைத்திறன் மிக்க பொறிமுறைகளை நிறுவுதல். சர்வதேச மனிதாபிமான மனித உரிமை சட்டங்கள் குறிப்பாக 2009இல் முடிவுக்கு வந்த மோதல் தொடர்பில் மீறப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஆராயும் சுதந்திரமாக சர்வதேச விசாரணையை ஆதரித்தலும் ஒத்துழைத்தலும். செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட சிபாரிசுகளை செயற்படுத்துவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தின் செயன்முறையுடன் ஒத்துழைக்க உறுதி கொள்ளல் போன்ற விடயங்களே அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’