இ லங்கை படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்குமாறு சிலவேளை அமெரிக்கா இலங்கையிடம் கேட்டால் அதுதொடர்பாக அப்போது யோசிக்கப்படும் என்று ஊடகத் துறை அமைச்சரும் அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இலங்கை படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ மறுத்துவிட்டதாக கடந்த 5 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்திருந்தது. இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. எனினும் இலங்கை படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்காவினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ மறுக்கவில்லை என்பதுடன் இதுதொடர்பாக எந்த கோரிக்கையும் அமெரிக்காவிடம் இருந்து கிடைக்கவில்லை எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் இணையத்தளத்தில் தெரிவித்திருந்ததோடு ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி தொடர்பான செய்திகளை வெளியிடும் போது ஒரு முறைக்கு இரு முறை ஆராய்ந்து பிரசுரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர். கேள்வி: அரசாங்க தகவல் திணைக்களத்தினால் தான் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதனையே நாங்கள் பிரசுரித்தோம். அதன் பின்னர் ஏன் செய்திகளை ஒருமுறைக்கு இருமுறை நாங்கள் ஆராய்ந்து போட வேண்டும்? பதில்: ஜனாதிபதி தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடும் போது ஒரு முறைக்கு இரு முறையல்ல. மூன்று முறை ஆராய்ந்து பிரசுரிக்க வேண்டும். கேள்வி: இலங்கை படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்க அமெரிக்காவிடம் இலங்கை ஒத்துக்கொண்டதாக 2009 ஆம் ஆண்டு அரசாங்கம் அறிவிருத்திருந்தது. ஆனால் தற்போது ஒன்றும் நடக்கவில்லை என்று கூறுகின்றீர்கள்? பதில்: எனக்கு இது பற்றி சரியாக தெரியாது. இது தொடர்பாக நாங்கள் ஆராய்ந்துக் கொண்டிருக்கின்றோம். கேள்வி: இலங்கை படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி இலங்கை ஒத்துக்கொண்டாக விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் செய்திகள் வெளியாகியிருந்தனவே..? பதில்: விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் எல்லா செய்திகளும் வெளியிடப்படுகின்றன. இந்த இணைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளமையால் அது உண்மையாகி விடாது. எனினும் இவ்விடயம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. கேள்வி: ஒரு வேளை இலங்கை படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புமாறு அமெரிக்கா கேட்டால் உங்கள் நிலைப்பாடு..? பதில்: இலங்கை படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புமாறு அமெரிக்கா இலங்கையிடம் கேட்டால் அது தொடர்பாக அப்போது யோசிப்போம். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’