வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 25 பிப்ரவரி, 2013

யாழ்.குடாநாட்டிற்கு வந்து நிலைமையை நேரில் அறியுமாறு இந்திய ஊடகவியலாளர்களுக்கு அமைச்சர் அழைப்பு



யாழ்.குடாநாட்டின் தற்போதைய அபிவிருத்தி மேம்பாடு தொடர்பில் உண்மை நிலவரங்களை அறிய இந்திய ஊடகவியலாளர்களை நேரில் வருகைதருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கச்சதீவு புனித அந்தோனியார் கோவில் வருடாந்த உற்சவத்திற்காக நேற்றைய தினம் அங்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள், இந்திய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் அரசினால் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவை தொடர்பிலான தவறான பிரச்சாரங்களால் இந்திய உள்ளிட்ட வெளிநாடுகள் உண்மை நிலவரங்களை அறிய முடியாது இருக்கின்றது.

எனவே அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி மேம்பாட்டு செயற்திட்டங்கள் தொடர்பில் உண்மை நிலவரங்களை நேரில் கண்டறியும் பொருட்டு இந்திய ஊடகவியலாளர்களை இலங்கைக்கு வருகை தருமாறும் அதனூடாகவே உண்மைகளை கண்டறிய முடியுமென்றும் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தற்போது ஒரு சமாதான சூழல் நிலவுகின்றது என்பதுடன், அங்கு மதத் தலங்கள் அழிக்கப்படுவது முற்றிலும் தவறான செய்தியென சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள்,  அவ்வாறு எவ்விதமான நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை என்பதுடன், குடாநாட்டில் இராணுவ அச்சுறுத்தல் இருப்பதான கருத்தை முற்றாக மறுத்திருந்தார்.

இதனிடையே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கொள்வதாக இருக்கின்ற போதிலும் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைய மறுத்து வருகின்றதையும் இதனூடாக அவர்கள், அரசியல் தீர்வினை ஒருபோதும் விரும்பப் போவதில்லை என்பது தெரிய வருகின்றது என்றும், அவ்வாறு அவர்கள் அரசியல் தீர்விற்கு உண்மையில் முன்வந்தால் அவர்களுக்கு அரசியல் இல்லாமல் போய் விடும் என்றும் அதனால் மக்களிடையே தொடர்ந்தும் குழப்ப நிலையையே அவர்கள் விரும்புகின்றனர் என்றும் தெரிவித்தார்.

இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களது பிரச்சினைக்கு இருதரப்பு அரசும் பேச்சுவார்த்தை நடத்துவதன் ஊடாகவே தீர்வு காணமுடியுமென்பதுடன், இதற்கு தீர்வு காணும் முயற்சியாகவே தாம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்த அமைச்சர் அவர்கள், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய நடவடிக்கையால் எமது பகுதி கடலிலுள்ள இயற்கை வளங்கள் முற்றாக அழிக்கப்படும் அதேவேளை,  முற்றாக அழிக்கப்படும் அதேவேளை, அதுசார்ந்து வாழும் வாழ்வாதாரமும் முற்றாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியதுடன், தடைசெய்யப்பட்ட இழுவலைபடகுத் தொழிலை இந்திய கடற்றொழிலாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

இலங்கை பல்வேறு நாடுகளுடன் உறவுகளை பேணி வரும் அதேவேளை, இந்தியாவுடன் தொப்புள் கொடி உறவு இருப்பதாகவும் தெரிவித்ததுடன், இந்திய இலங்கை கடற்றொழிலாளர்களது பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தைக்கு நாம் தயாராகயிருக்கின்றோம் என்பதுடன், இவ்விடயத்தை இந்திய ஊடகங்கள் எவ்விதமான ஒளிவு மறைவின்றி வெளியிட்டு இருதரப்பு பி;ரச்சினைக்கும் உரிய தீர்வு காண்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு அமைச்சர் அவர்கள் எழுதிய இந்திய கடற்றொழிலாளர்களால் இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகளை விளக்கிய கடிதத்தையும், யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தையும் சமர்ப்பித்தார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.

இதில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் உடனிருந்தனர்.




 

-->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’