
ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகளில் கவனம் செலுத்தப்பட்டு வருவதனால் இந்த கணினிமுறை தாக்குதல் நடைபெறும் நேரம் முக்கியத்துவம் பெறுகின்றது என்று ஊடக அமைச்சின் செயலாளர் ஷரித்த ஹேரத் தெரிவித்துள்ளார். அவர்கள் பல முனைகளில் தொழிற்படுகின்றனர். அவற்றில் இதுவும் ஒன்றாகும். ஊடக அமைச்சின் இணையத்தளமான media.gov.lk ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டு, யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சில கொடூரங்களை காட்டும் ஒரு இணைப்பை ஏற்றியிருந்தது. அதில் அப்பாவி தமிழர்களை கொல்வதை நிறுத்துங்கள் அல்லது எமது தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்ற செய்தியும் காணப்பட்டது. -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’