நாடாளுமன்றத்திலுள்ள பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் யுத்ததிற்கு பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தடையாகவுள்ள காரணிகள் தொடர்பாக பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் மக்களை சந்தித்து இந்த குழுவினர் கலந்துரையாடவுள்ளனர்.. இந்த குழுவில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வசந்த சேனாநாயக்க, ஷேஹான் சேமசிங்க, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், ஜக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பிர்களான ஹரின் பெர்ணான்டோ, நிரோஷன் பெரேரா மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி ரகு பாலச்சந்திரன் ஆகியோர் இந்த விஜயத்தில் பங்கேற்கின்றனர். ரோயல் பொதுநலவாய சங்கம், இண்டநேஷனல் அலட் மற்றும் வன் டெக்ஸ் இனிசியேட்டிவ் ஆகிய அமைப்புக்கள் கூட்டாக விடுத்த அழைப்பின் பேரிலேயே இக்குழுவினர் பிரித்தானியா செல்கின்றனர். இந்த விஜயத்தினை மேற்கொள்ளும் இலங்கை பிரதிநிதிகள் பல்வேறுபட்ட தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள புலம்பெயர் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையடவுள்ளனர். அத்துடன் அந்நாட்டு ஜனநாயக நடைமுறைகளை அறிந்து கொள்வதற்காக உள்ளுர் மற்றும் தேசிய அரச நிறுவனங்களுக்கும் விஜயங்களை மேற்கொள்ளவுள்ளனர். இந்த பிரதிநிதிகள் பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் கலாநிதி கிறிஸ் நோனிஸையும் ஜக்கிய ராஜ்யத்தின் வெளிநாட்டு மற்றும் பொது நலவாய உதவி செயலாளரான அலிஸ்டெயர் பேர்ட்டினையும் சந்திக்கவுள்ளனர். இதேவேளை இந்த குழுவினர் எற்கனவே வட மாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள மக்களுடன் கருத்துப் பரிமாறல்களை செய்துள்ளதுடன் இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் உள்ள மக்களையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். இக்குழுவினர் எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’