
நாட்டிற்கு பொருத்தமான மற்றும் எதிர்கால் வேலைவாய்ப்புக்கு பொருத்தமான கல்விமுறையை ஏற்படுத்தும் வகையிலேயே சட்டங்களை இயற்றுமாறு ஜனாதிபதி நேற்று ஆலோசனை வழங்கியுள்ளார். கல்வியமைச்சின் செயற்றிடங்களை ஆராயும் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பிள்ளைகள் இருப்பதனால் தான் ஆசிரியர்கள் இருக்கின்றனர்.அதேபோல பிள்ளைகளும் ஆசிரியர்களுக்காகவே இருக்கின்றனர். ஆகையால், நல்ல கல்வியை இந்நாட்டு பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். அதற்காக கல்வித்துறையில் இருக்கின்ற அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்படல் வேண்டும் என்றும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’