வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

சிங்கள பாடசாலைக்கு ஹிஜாப் அணிந்து செல்ல முடியும்: உயர் நீதிமன்றம்



சிங்கள மொழி மூலமான பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள் அந்த பாடசாலைக்கு ஹிஜாப் அணிந்து செல்ல முடியும் என்று உயர் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே உயர் நீதிமன்றம் மேற்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளது. ருவன்வெல்ல பிரதேசத்திலுள்ள சிங்கள பாடசாலையொன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதை குறித்த பாடசாலையின் அதிபர் தடை செய்துள்ளார். இந்நிலையில் அந்த பாடசாலையில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவியின் பெற்றோர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவை விசாரணைக்கு உட்படுத்திய போதே சிங்கள பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவிகள் தமது ஹிஜாப் ஆடையை அணிய முடியுமென உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’