
அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனது மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதைக் கண்டித்து மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்பு தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர் உதவும் கரங்கள், மலேசிய தமிழர் முன்னேற்ற இயக்கம் ஆகிய அமைப்புகளால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந் நிலையில் மலேசியப் பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி அறிவித்தனர். அதனையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழகத் தலைவர்கள் மூவரை கைது செய்து அழைத்து செல்ல பொலிசார் முயற்சித்தனர். இதனால் பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இலங்கைத் உயர் ஸ்தானிகராலயம் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். இத் தாக்குதலில் தூதரகத்தின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டது. இதனையடுத்து பொலிசார் வலுக்கட்டாயமாக போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். - See more at: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59770-2013-02-28-14-22-01.html#sthash.NLhIX1MO.dpuf -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’