வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 28 பிப்ரவரி, 2013

புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட கப்பல்கள், தங்கம் எங்கே: ஜே.வி.பி. கேள்வி


 மிழீழ விடுதலை புலிகளுடனான யுத்தத்தின்போது அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கப்பல்கள், பெரும் தொகையான பணம் மற்றும் தங்கம் ஆகியவற்றுக்கு என்ன நடந்தது என கேட்டு மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான ஊழக்கு எதிரான குரல் எனும் இயக்கம் இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளது.
தமிழீழ விடுதலை புலிகளிடமிருந்து கைப்பற்றிய பின் இந்த பொருட்கள் மற்றும் பணம் என்பன சில அதிகாரமிக்க நபர்களினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக எமக்கு தகவல்கள் கிடைந்துள்ளன என இந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். இவை பற்றிய விபரத்தை இயன்றளவு விரைவாக அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். நாம் இது பற்றி இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவிடம் முறையிடுவோம் என அவர் குறிப்பிட்டார். சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த தமது மூன்று ஆதரவாளர்களை மோதரை பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். பல வருடங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில், பல கப்பல்கள் உட்பட சில பொருட்கள் தமிழீழ விடுதலை புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக அரசாங்கம் குறிப்பிட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்காவின் கேள்விக்கு பதிலளித்த அரசாங்கம், அந்த பொருட்கள் யாவும் மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தது. ஆனால் அவற்றின் பெறுமானம் பற்றி இதுவரை எதுவும் குறிப்பிடப்படவில்லை. - See more at: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59741-2013-02-28-08-45-34.html#sthash.OyE5e0RA.dpuf -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’