வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 11 பிப்ரவரி, 2013

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பில் கூட்டமைப்பு கைச்சாத்திடவில்லை


நாட்டையும் மக்களையும் வாட்டிக்கொண்டிருக்கும் ராஜபக்ஷ ரெஜிம் நிர்வாகத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு முன்னெடுக்கும் போராட்டத்தின் ஆரம்பம் இன்று திங்கட்கிழமை உதயமாகியது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது அந்த ஒப்பந்தத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைச்சாத்திடவில்லை. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை தீவிரமாக முன்னெடுக்கும் நோக்கத்துடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட 12 கட்சிகள் பொது வேலைத் திட்டம் ஒன்றின் அடிப்படையில் இணைவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் ஐக்கிய தேசிய கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிச கட்சி, நவ சமசமாஜ கட்சி, நவ சிஹல உறுமய, மவ்பிம ஜனதா கட்சி, ருஹுனு ஜனதா கட்சி, எக்சத் ஜனதா பெரமுன மற்றும் முஸ்லிம் தமிழ் முன்னணி உட்பட 11 கட்சிகள் கைச்சாத்திட்டன. வெளிநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நாடு திரும்பிய பின்னர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’