எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு' கூட்டணியுடனான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா? இல்லையா? என்பது தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நாளை (19) ஆம் திகதி ஆராயவிருப்பதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தின் போதே மேற்படி விவகாரம் தொடர்பில் ஆராயவிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு கூட்டணியின் புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஒன்பது கட்சிகள் கொழும்பில் வைத்து கடந்த 11 ஆம் திகதி கைச்சாத்திட்டன. தமிழ்தேசியக்கூட்டமைப்பு அந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் அன்றையதினம் கைச்சாத்திடவில்லை. எனினும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைச்சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றினார். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளிநாட்டுக்கு சென்றிருப்பதால் அவர் நாடு திரும்பியதன் பின்னர் கூடி ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்று அவர் தனதுரையில் தெரிவித்திருந்தார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு கூட்டணியின் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்து இடுவது தொடர்பாக கூட்டமைப்பு நாடாளுமன்றக்குழு இறுதி முடிவை எடுக்காததே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கடந்த 11 ஆம் திகதி கைச்சாத்திடாமைக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கூட்டமைப்பின் தலைவர் நாடு திரும்பியுள்ளதுடன் வெளிமாவட்டங்களில் தங்கியுள்ள கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாக விருக்கின்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொள்வதற்காக வருகைதருவார்கள் அத்துடன் அன்றைய தினமே கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டமும் நடைபெறும். அந்த கூட்டத்தின் போது எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு கூட்டணியின் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையொப்பம் வைப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்று கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாட்டையும் மக்களையும் வாட்டிக்கொண்டிருக்கும் ராஜபக்ஷ ரெஜிம் நிர்வாகத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு முன்னெடுக்கும் போராட்டத்தின் ஆரம்பம் கடந்த 11 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் உதயமானது. இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் 12 கட்சிகள் கைச்சாத்திடவிருந்தன என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஐக்கிய தேசிய கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிச கட்சி, நவ சமசமாஜ கட்சி, மவ்பிம ஜனதா கட்சி, றுஹுனு ஜனதா கட்சி, எக்சத் ஜனதா பெரமுன மற்றும் முஸ்லிம் தமிழ் முன்னணி உட்பட 9 கட்சிகள் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கதாகும் -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’