வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 16 பிப்ரவரி, 2013

ரஷ்யாவில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1100 ஆக அதிகரிப்பு



ஷ்யாவின் தென்பகுதியில் எரிநட்சத்திர விழுந்து வெடித்ததினால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1100 ஆக அதிகரித்துள்ளது என்று அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இருந்து 1,500 கிலோ மீற்றர் தொலைவில் யுரால் பகுதியில் உள்ள செல்யபின்ஸ்க் என்ற இடத்திலேயே இந்த எரிநட்சத்திரம் வெடித்துச் சிதறியுள்ளது. விஞ்ஞானிகள் கணிப்பிட்டுள்ளதன் பிரகாரம் 10 தொன் நிறையில் இரண்டு மீற்றர் நீளமான எரிநட்சத்திரமே இவ்வாறு வெடித்து சிதறியுள்ளது. மணித்தியாலயத்திற்கு 54 ஆயிரம் கிலோமீற்றர் வேகத்தில் வாயுகோளத்திற்குள் புகுந்த எரிநட்சத்திரம் பூமியிலிருந்து சுமார் 30 க்கும் 50 க்கும் இடைப்பட்ட தூரத்தில் வெடித்து சிதறியுள்ளது. அதன் பின்னர் அது எரிமழையாக பொழிந்துள்ளது. இதனால் குறிப்பிட்ட பகுதியில் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’