
மூன்று முறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை லசந்த விக்கிரமதுங்கவின் சகோதரர், லால் விக்கிரமதுங்கவிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லண்டனில் பொருளாதார மற்றும் அரசியல் விஞ்ஞானப் பாடசாலையில், நவநீதம்பிள்ளை கடந்த வெள்ளிக்கிழமை உரையாற்றியிருந்தார். அவரது உரையை அடுத்து இடம்பெற்ற கருத்தரங்கிலேயே உவிந்து குருகுலசூரிய இதனை பகிரங்கமாக கூறியுள்ளார். லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில் சரத் பொன்சேகா சம்பந்தப்பட்டுள்ளதாக மூன்று முறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியதாக, தன்னிடம் தெரிவித்த லால் விக்கிரமதுங்க, சாத்தியப்பட்டால், இதுபற்றி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொண்டதாகவும் உவிந்து குருகுலசூரிய தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தரங்கை அடுத்து இடம்பெற்ற இராப்போசன விருந்தின் போது, லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பாக மேலதிக விசாரணை நடத்தக்கோரும் லால் விக்கிரமதுங்கவின் கடிதத்தின் பிரதியை ஊவிந்து குருகுலசூரிய, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் கையளித்ததாக அறியப்படுவதாக கொழும்பு டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’