வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 24 ஜனவரி, 2013

இலங்கையின் சுதந்திர தினத்தன்று சென்னையில் டெசோ கூட்டம்


ழத் தமிழர்களை பாதுகாப்பதற்காக திமுக தலைவர் கருணாநிதி ஏற்படுத்தியிருக்கும் டெசோ அமைப்பின் அடுத்த கூட்டம் இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதி அறிவாலயத்தில் இடம்பெறவுள்ளது. டெசோ மாநாடு நடத்தி அதன் தீர்மாங்களை ஐ.நா.விடம் ஸ்டாலின் மற்றும் டி.ஆர். பாலு ஆகியோர் சில மாதங்களுக்கு முன்பு அளித்திருந்தனர். முள்ளிவாய்க்கால் போருக்கு பிறகு ஈழத்தை முழுவதுமாக சிங்களமயமாக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழ்ப் பெயர்களில் உள்ள நகரங்களின் பெயர்களை சிங்களத்தில் மாற்றி வருகிறது. 89 நகரங்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக அறிக்கை விடுத்திருந்த கருணாநிதி, இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரது கவனத்திற்கும் இப்பிரச்னையை கொண்டு சென்றிருந்தார். இந்த நிலையில்தான் டெசோ கூட்டம் நடபெறபோவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’