வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 9 ஜனவரி, 2013

ரிசானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றம்


லங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கிற்கு சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இச்செய்தியினை இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்ற மூதூரை சேர்ந்த ரிசானா நபீக், அங்கு தான் புரிந்த வீட்டு உரிமையாளரின் நான்கு மாத சிசுவினை கடந்த 2005ஆம் ஆண்டு கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு நீண்ட காலமாக அந்நாட்டு சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிசுவை கொலை செய்தமை உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவித்து அந்நாட்டு நீதிமன்றம் ரிசானாவிற்கு மரண தண்டனை தீர்ப்பு விதித்திருந்தது. இந்த தீர்ப்பினை மீள் பரீசிலினை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல அமைப்புகளும் சவூதி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’