தி விநெகும சட்டமூலத்தால் அமைச்சுக்கு எல்லையில்லா அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதோடு நிதி நிர்வாகம் தொடர்பில் வெளிப்படைத்தன்மையில்லாமல் உள்ளது. இதனால் இதிலுள்ள பணம் அரசியலுக்கும் செலவு செய்யப்படலாம் என்று ஐ.தே.க. எம்.பி. சஜித் பிரேமதாச இன்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற திவிநெகும சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாச எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
திவிநெகும சட்டமூலத்தில் நிதி நிர்வாகம், கண்காணிப்பு தொடர்பில் வெளிப்படைத்தன்மையில்லை. இதனால் நாட்டு மக்களின் நிதியில் ஊழல் மோசடிகள் இடம்பெறலாம். அதைவிடுத்து ஏழைகளின் பணத்தை தமக்கு தேவையான விதத்தில் செலவு செய்யவேண்டாம். இந்தச் சட்டமூலத்தால் அமைச்சுக்கே அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’