திவிநெகும சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
சிறுப்பான்மை கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகியன இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி, தமிழத் தேசிய கூட்டமைப்பு, பிரஜைகள் முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன குறித்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’