சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளான எமக்கும், பாராளுமன்றத்துக்குமே உள்ளது எனவே எமக்கு உத்தரவிட எவருக்கும் அதிகாரம் இல்லையென அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற திவிநெகும சட்டமூல இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எமது நாட்டு வரலாற்றின் முக்கியத்துவம்மிக்க சட்ட மூலம் தொடர்பில் பேசக்கிடைத்தமேயே நான் பெற்ற பாக்கியமாகும்.
19 இலட்சத்திற்கும் மேலான சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கும் , 27 ஆயிரத்திற்கு மேல் சமுர்த்தி அதிகாரிகளும் அரசாங்க உத்தியோகத்தர்களாக மாறும் நிலைமை திவிநெகும மூலம் உருவாகிறது எனவும் தினேஷ் குணவர்தன இதன் போது சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்திற்கே சட்டங்களை தயாரிக்கும் அதிகாரம் உண்டு/ அது அரசியலமைப்பிலேயே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எந்தளவு கலநிதிப் பட்டங்கள் இருந்தாலும் பலனில்லை. சட்டங்களை தயாரிப்பது யார் என்பதை புரிந்துகொள்ளாவிட்டால் பாரளுமன்றம், சட்டவாக்கம் உட்பட பல்வேறு நிறுவனங்களை மக்கள் பிரநிதிகளான நாமே உருவாக்கின்றோம். இதனை ஜனாதிபதியாலும் உருவாக்க முடியாது எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’