அ ரசாங்கத்தின் இணையத்தளங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், இலங்கை துறைமுக அதிகாரசபையின் இணையத்தளம் செவ்வாய்க்கிழமை உட்புகுந்து தாக்கப்பட்டுள்ளது.
இதே பாணியில் இலங்கை தொலைக்காட்சி அலைவரிசைகள் இரண்டினதும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தினதும் இணையத்தளங்கள் தாக்கப்பட்டுள்ளன.
இணையத்தளங்கள் மீது தாக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி டேவிட் ஜோன்ஸ் உங்களை தாக்கியுள்ளார். கழுதைகளை வெளியே போட நாம் வருவோம் என்ற செய்தியும் அனுப்பப்பட்டிருந்தது.
1000 மின்னஞ்சல் விலாசங்களையும் இரகசிய கடவுச் சொற்களையும் முறியடித்து 'ஓர் இலங்கை' என்னும் அமைப்பின் இணையத்தளத்தை தாக்கியதாக டேவிட் ஜோன்ஸ் கூறியுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இணையத்தளத்தை தாக்கிய டேவி ஜோன்ஸ் அதன் தரவுத்தளத்தை வெளிக்கொண்டுள்ளது.
கடந்தவாரம் தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தாக்கப்பட்டு குழப்பப்பட்டது. இந்த இணையத்தளத்தை தாக்கியவர் கேம் ஓவர் என தன்னை அழைத்திருந்தார்.
-->
                      -
                    

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’