வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 7 ஜனவரி, 2013

ஐ.தே.க.விடம் ஊடகங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: ரணில்


டந்த வாரம் தனக்கு எதிராக எழுதிய ஊடகங்கள் ஐக்கிய தேசியக் கட்சியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 'நீதிமன்ற விசாரணையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லையென்பதால், அவை எங்களுக்கு எதிராக பிழையாக செய்திகளை எழுதின. ஆனால் இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு சரியாதென உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து அறியமுடிந்தது' எனவும் அவர் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் கட்சி உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் இயக்கத்தின் அங்குரார்ப்பண வைபவத்திலேயே அவர் இவ்வாறு கூறினார். 'இந்நாட்டின் கல்வி, இலவச சுகாதார சேவை மற்றும் ஏனைய துறைகளில் அரசாங்கம் குழப்பத்தை விளைவித்துள்ளது. தற்போது அவர்கள் நீதித்துறை மீது கவனத்தை செலுத்தியுள்ளதுடன், பிரதம நீதியரசரையும் துன்புறுத்திவருகின்றனர். இத்துறைகளை சீரமைக்க 2014ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வருவதை நாங்கள் யாவரும் உறுதிப்படுத்த வேண்டும்' எனவும் அவர் கூறினார் -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’