ம க்கள் வீதிக்கு இறங்கிப் போராடி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை விரட்டியடிப்பதன் மூலமே நாட்டில் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தவும் நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்தவும் முடியும் என எதிர்க் கட்சித்தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே எதிர்க் கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பிரதம நீதியரசருக்கொதிரான குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டதன் மூலம் நாட்டில் ஜனநாயகம் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் ஆரம்பத்திலிருந்து கூறிவந்தோம். ஆனால் சிலர் கனவு கண்டுகொண்டிருந்தனர். அரசாங்கம் அரசியலமைப்பின் 107 ஆம் பிரிவின் 3ஆம் பிரிவு மற்றும் கட்டளைச்சட்டம் என்பவற்றை மீறி குற்றப்பிரேரணையை கொண்டுவந்தது. இவ்வாறு செய்யமுடியாது என்று நாங்கள் கூறினோம். நாட்டில் ஏகாதிபத்திய ஆட்சியை ஜனாதிபதி மஹிந்தவினால் தனித்து உருவாக்க முடியாது. இதற்கு உதவிகள் தேவையாகும் அந்த உதவிகளை யார் செய்வதென்றே நாம் பார்க்க வேண்டியுள்ளது. இதேவேளை, நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு மக்கள் வீதிக்கு இறங்கி போராடுவதே காணப்படும் ஒரே தெரிவாகும் என்றார். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’