ஊழல் குற்றச்சாட்டு வழக்குத் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் ராஜ பெர்வேஷ் அஷ்ரபைக் கைதுசெய்யுமாறு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீர் மற்றும் மின்சக்தி அமைச்சராக இருந்தபோது கடந்த 2010 ஆம் ஆண்டு மின் உற்பத்தி திட்டமொன்றுக்கு அனுமதி வழங்க இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டை அஷ்ரப் மறுத்துள்ளார்.
இந்த தீரப்பின் காரணமாக இவரை உடனடியாக பதவி விலக்கும் சாத்தியமில்லை என அவதானிகள் கூறியுள்ளனர்.
அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஜனரஞ்சக மார்க்க அறிஞர் தஹிறுல் காட்றி தலைமையில் பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்லாமாபாத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து இந்த தீரப்பு வந்துள்ளது.
இரண்டும் ஒரே நேரத்தில் நடந்தது தற்செயலானதாக இருக்கலாம் என பிபிசி கூறியது. ஆனால், தீரப்பு வந்த நேரம், இந்த மார்க்க அறிஞருக்கு, நீதித்துறை இராணுவம் என்பவற்றிலுள்ள சில சக்திகளின் ஆதரவு இருப்பதை காட்டுவதாக அவதானிகள் கூறினார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’