வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 30 ஜனவரி, 2013

இந்திய வீட்டுத்திட்டத்தில் பாரபட்சம்; வவுனியாவில் ஆர்ப்பாட்டம்


ந்திய வீட்டுத்திட்டத்தில் தமிழ் மக்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி மீள்குடியேறியோருக்கான நலன் பேணும் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது.
வவுனியா தாதியர் கல்லூரிக்கு முன்பாக ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து வவுனியா மாவட்ட செயலகம்வரை சென்று ஜனாதிபதிக்கான மகஜரை மாவட்ட செயலரிடம் கையளித்தனர். 'வீட்டுத்திட்டத்தில் பாரபட்சம் காட்டாதே', 'கட்டதாரிகளை ஏமாற்றியது போல் பாமரர்களையும் ஏமாற்றாதே', 'இந்திய வீட்டுத்திட்டத்தை தமிழர்களுக்கும் வழங்கு', 'வேண்டாம் வேண்டாம் பாரபட்சம் வேண்டாம்' ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்ததுடன், பல்வேறு கோஷங்களையும் எழுப்பினர். இதன்போது மகஜரைக் கையளிப்பதற்காக மீள்குடியேறியோருக்கான நலன் பேணும் அமைப்பை சேர்ந்த 5 பேருக்கு மாவட்ட செயலகத்தினுள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’