வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 30 ஜனவரி, 2013

இந்தாண்டுக்குள் பச்சிலைப்பள்ளி நிறைவான அபிவிருத்தி நிறைந்த பிரதேசமாக மாற்றமடையும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்



ச்சிலைப்பள்ளி பிரதேசம் இந்தாண்டுக்குள் நிறைவான அபிவிருத்தி நிறைந்த பிரதேசமாக மாற்றமடையும் அதற்காக இன்னும் செய்யவேண்டிய பணிகள் சிலவே என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று (29) கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் மாசார் கிராமத்தில் பேரூட் நிறுவனத்தின் பதினொரு இலட்சம் ரூபா நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட பொது நோக்கு மண்டபத்தினை திறந்து வைத்து கருத்து தெரிவிக்கும் போதெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மீள்குடியேற்றத்திற்கு பின்னர் மூன்றரை ஆண்டுக்குள் பளை பிரதேசத்தில் நாளுக்குநாள் விரைவான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. எதிர்கால பளையினை கருத்தில் கொண்டு இந்த அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுகின்றன. பெருமளவுக்கு மக்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பளை பிரதேசம் முழுவதும் மின்சாரம் வழங்க்கப்படும் இடத்து இந்த பிரதேச மக்களின் எல்லாத்தேவைகளும் தீர்க்கப்பட்டுவிட்டதாவே கொள்ளமுடியும் அந்தளவுக்கு ஏனைய விடயங்கள் தொடர்பில் இங்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீதி புனரமைப்புக்கள், வீட்டுத்திட்டங்கள், பொதுநோக்கு மண்டபங்கள், ஆரம்ப சுகாதாரசேவை நிலையங்கள், பாடசாலைகள் என எல்லாத்துறைகளிலும் மேற்கொள்ளவேண்டிய பணிகளில் பெருமளவு செய்யப்பட்டுவிட்டன. மேலும் நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்ற மின்சாரம் உள்ளிட்ட சில பணிகள் நிறைவுறும் போது பச்சிலைப்பள்ளி பிரதேசம் நிறைவான அபிவிருத்திகள் நிறைந்த ஒரு பிரதேசமாக மாற்றமடையும் என்பதில் சந்தேகம் இருக்காது இந்த மாவட்டத்தில் ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் பளை பிரதேசத்திலேயே அதிகளவான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனக்குறிப்பிட்ட பாராளமன்ற உறுப்பினர் அவர்கள் தேவைகள் குறைகள் பிரச்சினைகள் இல்லாத மக்கள் உலகில் எங்கும் இருக்க முடியாது. எனவே எமது மக்களுக்கும் இன்னும் பல தேவைகள் பிரச்சினைகள் குறைபாடுகள் உண்டு ஆனால் அவை நிரந்தரமானதல்ல கடந்த காலம் போன்று தீர்க்கப்பட்டு மக்களின் வாழ்வில் முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்படும் அதற்கு மீள்குடியேற்ற காலவாழ்வும் பிரதேசங்களின் நிலைமைகளினையும் இன்றைய எமது மக்களின் வாழ்வினையும் பிரதேசத்தின் நிலைமைகளையும் ஒப்பிட்டுபார்த்தால் மிகத்தெளிவாக புரியும் எனவும் குறிப்பிட்டார். மீள் எழுச்சித்திட்ட சமூக வலுவூட்டாளர் ரதீஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் சத்தியசீலன், பளை பிரதேச சபை உறுப்பினர் தியாகராசா, போரூட் நிறுவனத்திட்ட முகாமையாளர் லோகநாதன், இரானுவ பொறுப்பதிகாரி கேணல் சில்வா, மாசார் பாடசாலை அதிபர் திருமதி தயாநிதி, கிராம சேவையாளர்கள் பளை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தலைவர் தியாகராசா, பனை தென்னை வள கூட்டுறவுச்சங்த்தலைவர் இராசதுறை, சமூகசேவையாளர் தர்மலிங்கம் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.







  -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’