வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 19 ஜனவரி, 2013

இளைஞர்கள் வசம் காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட வேண்டும்: ப.சிதம்பரம்


30 முதல் 40 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் வசம் காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடக்கும் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் (சிந்தன் சிவிர்) கலந்து கொண்ட அவர் அளித்த பேட்டியில், மாநில அளவில் காங்கிரஸ் முதலில் தனது கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். இதையடுத்தே தனது தேசிய திட்டத்தை முன் வைக்க வேண்டும். தேசிய திட்டங்களோடு மாநில அளவிலான திட்டங்களையும் முன் வைக்க வேண்டும். காரணம், நாடாளுமன்றத் தேர்தல் முழுக்க முழுக்க தேசிய அளவிலான பிரச்சனைகளை மட்டும் வைத்து சந்திக்கப்படுவதில்லை. இதனால் மாநிலப் பிரச்சனைகளுக்கும் முக்கியத்துவம் தருவது மிக அவசியம் என்றார். கட்சியில் கீழ் மட்ட அளவில் தலைமைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, இது தவறான வாதம். கட்சியில் ஏராளமான தொண்டர்கள் உள்ளனர். ஆனால், கட்சிக்கு முறையான கட்டமைப்பு தான் இல்லை. அதை சரி செய்துவிட்டால் தலைவர்கள் உருவாவார்கள். 30 முதல் 40 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் வசம் காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட வேண்டும். கூட்டணி ஆட்சி என்பது இப்போதைய கட்டாயமாகிவிட்டது. அதற்காக, தனித்து மெஜாரிட்டி பெறுவது தேவையில்லை என்று எந்தக் கட்சியும் சொல்லாது என்றார். Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/19/india-congress-should-get-organisation-shape-chidambaram-168206.html -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’