அமெரிக்கத் துணைத்தூதரகமொன்றை யாழ்ப்பாணத்தில் அமைக்குமாறு அமெரிக்க இராஜதந்திரிகளிடம், யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜதந்திரிகளிடமே யாழ். ஆயர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
அமெரிக்க இராஜதந்திரிகளுக்குக்கும் யாழ். ஆயருக்குமிடையிலான சந்திப்பொன்று ஆயர் இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போதே இக்கோரிக்கையை விடுத்துள்ளதாக யாழ். ஆயர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத்தூதரக அலுவலகம் செயற்பட்டுவருகின்றது. அவ்வாறே அமெரிக்காவும் துணைத்தூதரகமொன்றை இங்கு அமைத்து இங்குள்ள நிலைமைகளை நேரடியாக அவதானிக்கக்கூடிய நிலைமையை உருவாக்கவேண்டும். இவ்வாறு துணைத்தூதரகத்தை அமைக்கும்போது சிவில் சமூகத்துடனான தொடர்புகளை பேணிவரமுடியுமெனவும் அமெரிக்க இராஜதந்திரிகளிடம், யாழ். ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு பதிலளித்த அமெரிக்க இராஜதந்திரிகள், இக்கோரிக்கை தொடர்பில் தாம் கவனத்தில் எடுப்பதாகக் கூறியுள்ளதாகவும் யாழ். ஆயர் தெரிவித்துள்ளார்
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’