இ லங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இரு நாட்டு மீனவ அமைப்புகளின் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைக்கு இந்திய மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என இந்திய பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணையமைச்சர் வி.நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது, 'தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வரும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய, இலங்கை மீனவர்கள் எந்தப் பகுதிகளில் மீன்பிடிக்கலாம் என்பது குறித்து எல்லையை நிர்ணயம் செய்ய இரு நாட்டு மீனவ அமைப்புகளும் அதிகாரபூர்வமாக சந்தித்துப் பேச மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு முன்னரும் இரு நாட்டு மீனவ அமைப்பினர் ஒருசில முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அது அதிகாரபூர்வமற்ற முறையில் நடைபெற்றது. தற்போது இரு நாட்டு மீனவ அமைப்புகளின் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுடில்லிக்கு விஜயம் செய்த இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசியுள்ளார். தமிழக அரசு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இரு நாட்டு மீனவ அமைப்புகளின் பேச்சுவார்த்தையை நடத்தி ஒப்பந்தம் செய்ய முடியும். தமிழக அரசின் அனுமதி இருந்தால்தான் தமிழக மீனவ அமைப்புகள், இலங்கை மீனவ அமைப்புகளோடு பேச முடியும். இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளருக்கு இந்திய மத்திய வெளிவிவகார செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்' என்று கூறியுள்ளார். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’