வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 21 ஜனவரி, 2013

கல்வியை சிரியாவுக்கும் சுகாதாரத்தை லிபியாவுக்கும் ஒப்பிட்ட ரணில்


நா ட்டின் கல்வித்துறை சிரியாவை போன்றும் சுகாதாரத்துறை லிபியாவைப்போன்றும் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். தொடங்கஸ்லந்த பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டங்கள் இல்லை என்பதனால் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொ டுத்துக்கொண்டிருக்கின் றனர். அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. ஒவ்வொருத்துறையிலும் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. அரசாங்கத்தின் மீதும் அதன் செயற்பாடுகளின் மீதும் பலரும் தற்போது பாரிய எதிர்ப்புகளை காட்டி வருகின்றனர். என்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’