கலாநிதி சிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்குவதற்கான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மூத்த அமைச்சர் டியூ.குணசேகரவுக்கு இந்தியாவில் இருந்து பாராட்டுகள் குவிந்துள்ளன.
கடந்தவாரம், சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் டியூ.குணசேகர, அதனைக் கடுமையாக எதிர்த்துக் கருத்து வெளியிட்டிருந்தார்.
அத்துடன், வாக்கெடுப்பில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் அறிவித்திருந்தார்.
அரசின் நகர்வுக்கு எதிராக அவர் உரையாற்றி விட்டு நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறிய போது, முதலாவது தொலைபேசி அழைப்பு இந்தியாவில் இருந்து வந்தது.
அந்த அழைப்பை எடுத்தவர் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் தனிப்பட்ட செயலர்.
அந்த உரைக்காக, அவர் இந்தியப் பிரதமரின் சார்பில் பாராட்டுத் தெரிவித்திருந்தார்.
அதற்கடுத்து இந்தியாவில் இருந்த மேலும் பெருமளவு தொலைபேசி அழைப்புகள் வந்தன.
தொலைபேசி மூலம் டியூ.குணசேகரவுக்குப் பாராட்டுத் தெரிவித்தவர்களில் இந்தியாவின் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் பலரும் அடங்கியிருந்தனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்று உயர்மட்டத் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து விட்டு, இரு நாடுகளினதும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையில் உறவுகளை வலுப்படுத்துவதற்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’