வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 12 ஜனவரி, 2013

நாட்டுக்கு எதிராக சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி


அரசாங்கம் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்துக்கொண்டிருக்கின்றது. அதில் ஒரு சவால் நேற்றையதினம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனத்தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடட்டு எதிராக சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குற்றப்பிரேரணை விவகாரம் அரசியலமைப்பிற்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டது என்பதுடன் நீதிமன்றத்தின் சுயாதீனத்தையும் கௌரவத்தையும் பாதுகாப்பதற்காக சகலரும் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பயிற்சிபெற்ற பட்டதாரிகள் 52 ஆயிரம் பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த வைபவம் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’