வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 21 டிசம்பர், 2012

இலங்கைக் கிரிக்கெட் சபை மேல் நம்பிக்கையிழந்து விட்டேன்: மஹேல


லங்கைக் கிரிக்கெட் சபை மேல் தான் நம்பிக்கையிழந்து விட்டதாக இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார். இலங்கைக் கிரிக்கெட் சபைக்கு அவர் அனுப்பிய ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டதையடுத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உலக டுவென்டி டுவென்டி தொடரில் இலங்கைக்கு பயிற்சிகளை வழங்கிய பயிற்றுவிப்பாளர் மற்றும் ஏனைய ஊழியர்கள் சிலருக்கு ஊக்குவிப்புத் தொகைகளை வழங்குமாறு இலங்கைக் கிரிக்கெட் அணியினர் விடுத்த கோரிக்கையை நிராகரித்திருந்த இலங்கைக் கிரிக்கெட் சபை, அதுகுறித்து ஊடகங்களுக்கு விளக்கங்களை வழங்கியிருந்தன. உலக டுவென்டி டுவென்டி தொடரில் பங்குபற்றியமைக்காக இலங்கைக் கிரிக்கெட் சபைக்கு சர்வதேசக் கிரிக்கெட் சபைக்கு வழங்கவுள்ள தொகையின் 25 சதவீதம் இலங்கையின் 15 வீரர்களுக்கு வழங்கப்படுவது ஒப்பந்தப்படி கட்டாயமென்ற போதிலும், இலங்கையின் பயிற்றுவிப்பாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊக்குவிப்பினை வழங்குமாறு மேற்கொண்ட கோரிக்கையை நிராகரிப்பதாகத் தெரிவித்த இலங்கைக் கிரிக்கெட் சபை, இலங்கை வீரர்கள் அனைத்து பயிற்றுவிப்பாளர்களையும் அந்தக் கோரிக்கையில் இணைத்திருக்காததோடு, அதுகுறித்து ஏற்கனவே திட்டமிடல்கள் காணப்படாததால் அவர்களின் கோரிக்கையை நிராகரிப்பதாகத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மஹேல ஜெயவர்தன, இலங்கைக் கிரிக்கெட் சபைக்கு ரகசியமான முறையில் வீரர்கள் மேற்கொண்ட கோரிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக வீரர்கள் அவமானப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக இலங்கைக் கிரிக்கெட் சபை மேல் நம்பிக்கையிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை அணியோடு இணைந்து செயற்பட்ட முகாமைத்துவ அணிக்கும், பயிற்றுவிப்பாளர்களுக்கும் அவர்களது அர்ப்பணிப்பைப் பாராட்டி ஊக்குவிப்பு வழங்குமாறே கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்த மஹேல, 2007ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்திலிருந்து இந்த நடைமுறை காணப்படுவதாகவும், புதியதொன்றல்ல எனவும் தெரிவித்துள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’