வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 21 டிசம்பர், 2012

புத்தளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு


புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பாதிப்புக்குள்ளான மக்களின் எண்ணிக்கை 44 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகவும், 2 பேர்கள் மரணித்துள்ளதாகவும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் கேர்ணல் ரனவீர தெரிவித்தார். சிலாபம், பங்கதெனிய, பள்ளம பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கையடுத்து பாதிக்கப்பட்ட இக்குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் அமர்த்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கும் பணிகளை பிரதேச செயலாளர்கள் முன்னெடுத்துவருவதாகவும் கூறினார். இந்த வெள்ளத்தால் முழுமையாக 1000 வீடுகளும், பகுதியளவில் 2500 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதே வேளை சிலபாம் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த பெரும் எண்ணிக்கையிலான நோயாளர்கள் கொழும்பு, நீர்கொழும்பு, மாரவில் வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சில பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து சிலாபத்தின் ஊடாக புத்தளம் மற்றும் ஆனமடுவவிற்கு செல்லும் பாதைகளின் நீர்மட்டம் குறைந்திருப்பதால், பயணிகள் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.அதே வேளை உடைப்பெடுததுள்ள முன்னேஸ்வரம் குளத்தின் அணையினை மண் மூடைகள் கொண்டு திருத்தும் பணியினை கடற்படை, இரானுவம், மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் முன்னெடுத்துவருவதாக பணிப்பாளர் கேர்ணல் ரனவீர தெரிவித்தார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’