வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 21 டிசம்பர், 2012

முழுமையான புனர்வாழ்வின் பின்னரே பல்கலை மாணவர்கள் விடுவிக்கப்படுவர்: ஹத்துருசிங்க


ல்கலைக்கழக செயற்பாடுகள் நடைபெறுவதற்கும், மாணவர்களின் விடுதலைக்கும், கல்வி நடவடிக்கைகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எவ்வாறாயினும், நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை வளர்த்தெடுப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது' என யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
”கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு முற்றாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னரே அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இன்று முற்பகல், பலாலி இராணுவ தலைமை அலுவலகத்தில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினரையும், கைது செய்யப்பட்டுள்ள பல்கலை மாணவர்களின் பெற்றோரையும் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு கருத்து வெளியிட்ட ஹத்துருசிங்க மேலும் தெரிவிக்கையில், 'வெலிக்கந்தையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்தால் மட்டுமே பல்கலைக்கழக செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்ற நிபந்தனையை தவிர்த்துக்கொள்ள வேண்டும். பல்கலைக்கழக செயற்பாடுகள் நடைபெறுவதற்கும், மாணவர்களின் விடுதலைக்கும், கல்விக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. பயங்கரவாதத்தை வளர்த்தெடுப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. 30 வருடத்திற்கு முன்னிருந்த நிலைமையை மீண்டும் கொண்டுவர தம்மால் அனுமதிக்க முடியாது. சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்கும், தடை செய்யப்பட்ட இயக்கத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கும் இம்மாணவர்கள் முயற்சி செய்தார்கள் என்ற அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்படுகின்றனர். முற்றாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னரே இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடனும் பல்கலைக்கழக நிர்வாகத்துடனும் கலந்துரையாடப்படும்' என்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’