யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வந்த வைத்தியர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிராக அவ்வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
குறித்த வைத்தியசாலையில் பணியாற்றும் காது, மூக்கு, தொண்டை வைத்திய நிபுணர் எஸ்.திருமாறன், நேற்று இரவு இனந்தெரியாத ஆயுததாரிகளினால் தாக்குதலுக்கு உள்ளானார்.
இதனைக் கண்டித்து யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர். எஸ்.பவானந்தராஜா, வைத்திய சங்கத் தலைவர் எஸ்.நிமலன் உட்பட அனைத்து வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவசர சிகிச்சைப் பிரிவு வைத்தியர்கள் மட்டும் இந்த போராட்டத்தில் ஈடுபடவில்லை.
இப்பணிப் புறக்கணிப்பு நாளை நாடளாவிய ரீதியில் நடத்துவதற்கு உத்தேசிக்கபட்டுள்ளதாகவும், வைத்தியர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வைத்திய சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’