வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 24 டிசம்பர், 2012

ஷிராணி விவகாரம்: விசாரணையின் போது பதிவுசெய்யப்பட்ட வீடியோவை வெளியிட அரசு தீர்மானம்


பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிடம் குற்றப்பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத் தெரிவுக்குழு நடத்திய விசாரணையின் போது பதிவுசெய்யப்பட்ட வீடியோ பதிவினை பொதுமக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதன்மூலம் விசாரணைகள் நடத்தப்பட்ட விதத்தை பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக்க மீதான குற்றப்பிரேரணையை விசாரிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்ட அரச தரப்பு உறுப்பினர்களில் ராஜித சேனாரத்னவும் ஒருவராவார். இந்நிலையில் நீதியரசர் மீதான விசாரணைகளின் போது அவரை அவமதிக்கும் விதத்திலான வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டதுடன், ஒழுங்கான முறையில் அவர் நடத்தப்படவில்லையெனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதன்காரணமாகவே தான் விசாரணைகளின் இடைநடுவே வெளிநடப்புச் செய்ததாக ஷிராணி பண்டாரநாயக்கவும் அதன்போது தெரிவித்திருந்தார். மேலும் விசாரணைக்குழுவில் அங்கம் வகித்த எதிர்கட்சி உறுப்பினர்களும் பிரதம நீதியரசர் உரிய முறையில் நடத்தப்படவில்லையென அரசாங்க உறுப்பினர் சிலர் மீது குற்றம் சுமத்தியிருந்ததுடன் விசாரணைகளின் போது பதிவுசெய்யப்பட்ட வீடியோ பதிவை வெளியிடுமாறும் சவால் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’