வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 11 டிசம்பர், 2012

தெரிவுக்குழு அறிக்கையை ஆராய சுயாதீன குழு:ஜனாதிபதி


பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணையை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு சுயாதீன குழுவை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். கொழும்பு – 07 விஜயராமவில் இலங்கை பட்டய கணக்காளர்கள் கல்வி நிறுவனத்தின் புதிய பல்மாடி கட்டடத் தொகுதியை இன்று செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து அங்கு நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரான அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்கே சுயாதீன குழு நியமிக்கப்படவுள்ளது. தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைவாகவே இந்த சுயாதீன குழுவை நியமிக்கவுள்ளேன். தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை அமுல்படுத்துவதற்கு முன்னர் எனது மனசாட்சிக்கு மட்டுமே நான் பதிலளிக்க வேண்டும். அது சரியானதாகவும் இருக்கவேண்டும். நான் இந்த நடவடிக்கையை எனது தேவைக்காகவே எடுக்கின்றேன்.இவ்வாறு செய்யவேண்டும் என்று புத்தகங்களிலோ அல்லது சட்டத்திலோ இல்லை என்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’