வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 13 டிசம்பர், 2012

உரிமைப்போராட்ட வரலாற்றில் கறை படிந்த நெருப்பு நாள்!


ன்று டிசம்பர் 13. இது தமிழ் பேசும் மக்களின் உரிமைப்பேராட்ட வரலாற்றின் மீது கறை பூசப்பட்ட நெருப்பு நாள். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இலட்சிய வேட்கை கொண்டு எழுச்சியுற்று நின்றிருந்த தமிழ் பேசும் மக்களின் நீதியான உரிமை போராட்ட கனவுகளை ஏக பிரதிநிதித்துவம் என்ற கொடும் பிசாசு விழுங்கி ஏப்பம் விட்ட நினைவழியாநாள். தமிழ்பேசும் மக்களின் இலட்சிய கனவுகளை ஈடேற்ற பல்வேறு அமைப்புகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோற்றம் பெற்றன.

ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, ஈரோஸ், புலிகள் ஆகிய நான்கு அமைப்புகளும்    ஈழ தேசிய விடுதலை முன்னணி என்று கூட்டமைத்து செயற்பட்டன.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கென்று தமிழ் பேசும் மக்களுக்கு விடுதலை அமைப்புகள் மீதான நம்பிக்கை பிறந்தது. < உலகம் நம்மை திரும்பி பார்த்தது. ஒற்றுமையின் பலம் கண்டு உலகம் அதிர்ந்தது. எமது உரிமை போராட்டத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது.அதன் ஒரு படியாக பூட்டான் தலைநகர் திம்புவில் அன்றைய Nஐ. ஆர் nஐயவர்த்தனா அரசுக்கும் விடுதலை அமைப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. பயங்கரவாதிகளாக அன்றி சுதந்திரப்போராட்ட வீரர்களாக தமிழ் பேசும் விடுதலை அமைப்பு பிரதிநிதிகள் திம்புவில் ராஐ மரியாதையோடு வரவேற்கப்பட்டனர்.

ஆனாலும், அந்த ஐக்கிய முன்னணியும் தமிழர் ஒற்றுமையும் தொடர்ந்தும் நிலைக்க முடிந்திருக்கவில்லை.

புலிகளின் தலைமைக்கு தாம் மட்டுமே தலைமை என்ற ஏகப்பிரதிநிதித்துவ எண்ணம் பிறந்தது.

அந்த அடங்காத ஆசையில் தோளிலே கைபோட்டு நின்ற சக விடுதலை அமைப்புகளில் முதுகிலே குத்தியது புலிகளின் தலைமை.
1986 ஆம் ஆண்டு ரெலோ அமைப்பை தடை செய்திருந்த புலிகளின் தலைமை 1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி இரவு ஈ.பி.ஆர்.எல். எவ் அமைப்பை தடை செய்வதாக அறிவித்தது. அப்போது ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்புக்குள் உட்கட்சி முரண்பாடுகள் உருவாகியிருந்தன. ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் ஸ்தபாகர்களில் ஒருவரும் செயலாளர் நாயகமுமான தோழர் பத்மநாபா அவர்கள் தமிழ் நாட்டில் தங்கியிருந்தார். 

ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் இன்னொரு ஸ்தாபகரும், பிரதம தளபதியுமாகிய தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உட்கட்சி முரண்பாடுகளை பேசி தீர்ப்பதற்கு தோழர் பத்மநாபா அவர்களை சந்திக்க தமிழ் நாடு சென்றிருந்தார்.

இச்சமயம் பார்த்தே புலிகளின் தலைமை கபடத்தனமாக இத்தடை நடவடிக்கையில் இறங்கியிருந்தது.

ஓற்றுமையின் கனவுகள் புலிகளின் தலைமையால் தவிடு பொடியானது. சகோதரப்படுகொலை கண்டு உலகம் அருவருக்கத் தொடங்கியது. உரிமை போராட்டம் அழிவு யுத்தமாக மாறியது. புலிகளின் தலைமை தமது முகத்தில் சர்வதேச சமூகத்தினால் வழங்கப்பட்ட பயங்கரவாத முத்திரையை குத்திக்கொண்டது. அப்பாவி மக்களின் துயரங்களோடும் அவலங்களோடும் முள்ளிவாய்க்காலில் அழிவு யுத்தம் முடிவடைந்தது. 1986 டிசம்பர் 13 இல் புலிகளின் தலைமையால் ஈ.பி.ஆர்.எல்.எவ் தடை செய்யப்பட்டதாக அறிவித்திருந்தாலும், அதன் கொள்கைகள், இலட்சியக்கனவுகள் இன்னமும் வாழ்ந்துகொண்டே இருக்கின்றது ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் நடைமுறைச் சாத்தியமான புதிய வழிமுறையில் தமிழ் பேசும் மக்களின் இலட்சிய கனவுகள் நோக்கிய பயணம் உறுதியுடன் முன்னெடுக்கப்பட்டே வருகிறது.
-->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’