கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெண்களில் 12பேர் சிகிச்சைகளை அடுத்து இன்று மீண்டும் இராணுவ பயிற்சி முகாமுக்கு திரும்பியுள்ளனர். மேலும் இருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்தின் தொழிற்படையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளில் சிலர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு திடீர் சுகவீனமுற்ற நிலையில் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என்று கூறிய இராணுவ பேச்சாளர், இவர்கள் எவ்வகையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார். இருப்பினும், குறித்த பெண்கள் தங்கியுள்ள முகாமில், சம்பவ தினம் இரவு கேட்ட பயங்கரமான சத்தம் காரணமாக பயந்து உளநிலை பாதிக்கப்பட்ட நிலையிலேயே அவர்களில் 16பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர், தன்னிலை மறந்து பேசிக்கொண்டிருப்பதாகவும் மேலும் சிலர் பேச முடியாத வகையில் அதிர்ச்சி காரணமாக வாய்கள் இறுக மூடப்பட்டிருப்பதாகவும் அத்தகவல்கள் குறிப்பிட்டனர். இருப்பினும், இப்பெண்கள் சிறு உபாதைகளுக்கே உள்ளாகியுள்ளனர் என்று தெரிவித்த இராணுவ பேச்சாளர், சிகிச்சை முடிந்து முகாம் திரும்பிய 12பேர், இன்று மாலை இடம்பெற்ற பயிற்சிகளிலும் கலந்துகொண்டனர் என்று கூறினார். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’