வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 13 டிசம்பர், 2012

நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையீனம் துரதிர்ஷ்டவசமானது: கோட்டாபய



ந்து சமுத்திர பிராந்தியத்தில் பெரிய நாடுகளுக்கு இடையில் பரஸ்பர நம்பிக்கையீனம் காணப்படுவது துரதிர்ஷ்டவசமானது என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று கூறியுள்ளார். இப்பிராந்தியத்தின் ஆகவும் பெரிய கடற்படை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்து சமுத்திரத்தின் எதிர்காலம் தொடர்பில் இந்தியாவுக்கு முக்கிய வகிபாகம் உள்ளது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவும் கணிசமான கடற்படை வலுவை கொண்டுள்ளது' என அவர் கூறினார்.
இலங்கை கடற்படையால் ஒழுங்குப்படுத்தப்பட்டு 27 நாடுகள் பங்குபற்றிய மூன்றாவது 'காலி சம்பாஷனை' நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'வருங்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்வதற்கான 'தந்திரோபாய கடல் ஒத்துழைப்பு மற்றும் பங்குடமை' என்ற தொனிப்பொருளிலேயே 'காலி சம்பாஷனை' நடைபெற்றது. அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இப்பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கும் அதிகரித்து வருவது வெளிப்படையானது. இந்து சமுத்திர பிராந்திய நாடுகளில் சீனாவின் பொருளாதார செல்வாக்கும் அதிகரித்து வருகின்றது. இதை இந்தியாவும் அமெரிக்காவும் சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றன. இந்து சமுத்திரத்தில் அதிகரித்து வரும் சீன கடற்படை வலுபற்றியும் இப்பிராந்தியத்தில் கடல் கொள்கைக்கு எதிரான சீனாவின் செயற்பாடுகள் அதிகரித்து வருவதுபற்றியும் இந்த நாடுகள் விசனம் கொண்டுள்ளன. கைத்தொழிலில் பாரிய அபிவிருத்திக்கண்டு வரும் சீனாவுக்கு தொடர்ச்சியாக எண்ணெய் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய தேவையுள்ளது. இதற்காகவே சீனா இந்த பிராந்தியத்தில் தனது கடல்படையின் வலுவை அதிகரித்து வருகிறது. இந்த பாதுகாப்பு உணர்வை இலகுவில் விளங்கிக் கொள்ள முடியும். இந்து சமுத்திர பிராந்தியத்தில் முக்கியமான இடங்களில் சீனா நிதிப்படுத்திய துறைமுகங்கள் இருப்பதை இந்தியா விரும்பவில்லை. இந்தியாவை தென் திசைப்பக்கத்தால் முற்றுகையிடும் முயற்சியாக இந்தியா இதை பாரக்கின்றது. 'ஹம்பாந்தோட்டை துறைமுகம் முற்றுமுழுதாக பொருளாதார நலன் அடிப்படையானது. ஹம்பாந்தோட்டைக்கு 10 கடல்மைல் தெற்காக தினமும் 200க்கு மேற்பட்ட கப்பல்கள் பயணிக்கின்றன. இலங்கையில் பொருளாதார நலனுக்கு பயன்படுத்தக்கூடிய இந்த துறைமுகம் குறித்து பல வருடங்களுக்கு முன்னரே கலந்துரையாடப்பட்டது. கடுமையான நிபந்தனைகளின்றி எந்த நாட்டிலிருந்து எந்த உதவி வந்தாலும் இலங்கை அதை வரவேற்கின்றது. இதை ஒரு நாட்டுடன் அணிசேர்வதாக அரத்தம் கொள்ளலாகாது. பல நாடுகளின் வலுப்பாதுகாப்பு தமது சக்தி தேவைக்காக இந்து சமுத்திரத்தின் ஊடாக எரிபொருளை கொண்டு செல்வதில் தங்கியுள்ளது. கடல்கொள்ளை, பயங்கரவாதம், மனித கடத்தல், போதைபொருள் கடத்தல், சட்டவிரோதமான கழிவு கொட்டுதல் பலவிதமான அச்சுறுத்தல்களுக்கு இந்து சமுத்திரம் முகம் கொடுக்கின்றது. இவை இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பு, உறுதிப்பாடு நிலைபெறும் தன்மை ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. இப்பிராந்தியத்தின் நலனில் அக்கரையுள்ள நாடுகளிடையே பல்பக்க ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் 'காலி சம்பாஷனை முக்கிய பங்களிப்ப செய்யும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’