வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 26 டிசம்பர், 2012

உடற்கல்வி டிப்ளோமாதாரிகளின் நியமனம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா



யா ழ்.மாவட்டத்தில் உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான நியமனம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள யாழ்.அலுவலகத்தில் உடற்கல்வி டிப்ளோமா கற்கை பூர்த்தி செய்தவர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது வடமாகாணசபைக்குள் முதற்கட்டமாக பயிலுனர்களாக உள்வாங்கப்படும் அதேவேளை, நிரந்தர நியமனம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுமென்றும் தெரிவித்தார்.

அத்துடன் உடற்கல்வி டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு மேலதிக பயிற்சி பட்டறைகள் வழங்குவது தொடர்பில் துறைசார்ந்தோருடன் தாம் கலந்துரையாடியுள்ளதாகவும் அதனூடாக மாணவர்களது விளையாட்டுத்துறையை மேம்படுத்தக் கூடியதாக அமையுமென்றும் தைப்பொங்கலுக்கு பின்னர் நிரந்தர நியமனம் தொடர்பில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென்றும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது வடமாகாண கல்வி அபிவிருத்தி குழுத்தலைவர் இரா.செல்வவடிவேல் உடனிருந்தார்.


-->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’