த மிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளை தூதுக்குழுவொன்று நாளை வெள்ளிக்கிழமை சென்று பார்வையிடவுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன, தம்பர அமில தேரர் மற்றும் மன்னார் ஆயர் வண. ராயப்பு ஜோசப் ஆகியோரே வெலிக்கடை சிறைச்சாலைக்கு நாளை செல்லவுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளை அவர்களுடைய குடும்ப உறவினர்களினால் பண்டிகை காலத்திலும் சென்று பார்வையிடமுடியாதிருந்தது.
சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு அவர்களுடைய உறவினர்களுக்கு நத்தார் பெருநாள் மற்றும் வெசாக் ஆகிய தினங்களில் அனுமதியளிக்கப்படும்.
இந்த கைதிகள் யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச்சேர்ந்தவர்கள் என்பதனால் அவர்களுடைய உறவினர்களால் இவர்களை அந்த இரண்டு தினங்களில் கூட பார்வையிட முடியாதுள்ளது.
அதனால் அவர்களுக்கு நத்தார் பரிசுகளையும் கொடுத்துவிட்டு 100 உணவு பொதிகளையும் நாளை வழங்கவுள்ளதாக ஜயலத் ஜயவர்தன எம்.பி தெரிவித்தார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’