வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 27 டிசம்பர், 2012

பிரதம நீதியரசர் விவகாரத்தில் எமது யோசனைக்கு சாதகமான பதிலில்லை: திஸ்ஸ விதாரண


பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில் பாராளுமன்றத் தெரிவிக்குழுவின் அறிக்கை விவகாரம் முடிவிற்கு வந்த பின்னரே சுயாதீனக் குழுவொன்றின் ஊடாக இறுதி தீர்வைக் காண ஜனாதிபதி விரும்புகின்றார். ஆனால் இது ஏற்புடையதல்ல என்பதே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கொள்கையுடைய கட்சிகளின் நிலைப்பாடாகும் என்று அமைச்சரும் சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். நிலையியல் கட்டளையான 78 இல் திருத்தத்தை மேற்கொண்டு குற்றவியல் பிரேரணை விவகாரத்தை ஒத்தி வைக்குமாறு சபாநாயகரிடம் கோரியிருந்தோம். அல்லது பாராளுமன்றத்தின் விசேட விதிவிதானங்களைப் பயன்படுத்தி எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள குற்றவியல் பிரேரணை விவகாரத்தை காலாவதியாகக்கவும் வலியுறுத்தியுள்ளோம். ஆனால், இவ்விரண்டிற்கும் ஆக்கபூர்வமான பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’