வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 5 டிசம்பர், 2012

தமிழ் தெரியாததற்கு வெட்கப்படுகின்றேன்: அக்கரைப்பற்றில் அமைச்சர் டளஸ்


னது சகோதர மொழியான தமிழை பேசுவதற்கு என்னால் முடியாதிருப்பதை எண்ணி நான் வெட்கப்படுகின்றேன் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியி பொ­றுப்பாளரும், இளைஞர் விவகாரம் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சருமான டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இந்த நாட்டில் பெரும்பான்மை இனம், சிறுபான்மை இனம் என்று எவ்வித வேறு­பாடுகளும் இல்லை. எல்லோரும் இலங்கையரே என்ற கருத்தினை சுதந்திரம் பெற்றபோது டி.எஸ். சேனனாயக்க கூறியிருப்பாரேயானால், இந்த நாட்­டில் இனமுறுகல் ஏற்பட்டிருக்காது, யுத்தமும் வெடித்திருக்காது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியைத் திறந்து வைத்து, புதிய அதிபரிடம் கையளிக்கும் உத்தியோகபுர்வ நிக­ழ்வு நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு தொழில்நுட்பக் கல்லூரி சமூகத்தினர் முன்னிலையில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் டளஸ் தொடர்ந்து உரைநிகழ்­த்துகையில் கூறியதாவது, இந்த சிறிய நாட்டில் 20 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இரு மொழிகளை நாம் பேசுகின்றோம். ஆனாலும், அதிகமான சிங்களவர்களுக்கு தமிழும், பெ­ருமளவான தமிழ் முஸ்லிம் மக்களுக்கு சிங்களமொழியும் தெரியாதிருக் கி­ன்றது. இதுவே இன்று அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படையான தாகக் காணப்படுகின்றது. உண்மையில் எனது சகோதர மொழியான தமிழில் பேசுவதற்கு என்னால் முடி­­யாதிருப்பதையிட்டு நான் வெட்கப்படுகின்றேன். இந்த வெட்கத்தை என­க்குத் தந்தது எனது தாய் தந்தையரோ, பாடசாலையோ, அதிபரோ அல்ல. இந்த நாட்டை ஆட்சிபுரிந்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியின் ஆட்சியாளர்களேயாவர். ஆனாலும், இவ்விரு மொழிபேசும் மக்களுக்கு பரஸ்பரம் மற்றைய மொழியை கற்பதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டிருந்தால் பல விளைவுகளை தவிர்த்திருக்கலாம். இந்த நாட்டில் பெரும்பான்மை இனம் என்றோ, சிறுபான்மை இனம் என்றோ இரு பிரிவுகள் இல்லை. எல்லோரும் ஒரே பிரிவைச் சேர்ந்த இலங்கையரே என்று 2009ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளு­ம­ன்றத்தில் அறிவித்தார். இவ்வாறான அறிவிப்பை 60 வருடங்களுக்கு முன்­னர் அதாவது, சுதந்திரம் பெற்றபோது டி.எஸ்.சேனனாயக்கா போன்றவர்கள் விடு­த்திருந்தால் நிலைமைகள் வேறுமாதிரியாக அமைந்திருக்கும். எமது தாய்நாட்டில் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருக்காது, இனப்பிரச்சினை தோற்றம் பெற்றிருக்காது, இந்தக் கொடூர யுத்தம் வெடிப்பதற்கான தேவையும் இருந்திருக்காது. இன்று மீளத்திறக்கப்படும் அக்கரைப்பற்று தொழில்நுட்பக்கல்லூரி 8 மாதங்­களாக மூடிக்கிடந்தமைக்கான பொறுப்பை நான் வேறு யார் மீதும் சுமத்த­வில்லை. அதனை நானே ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கோருகின்றேன். அதே­நேரம், முன்னர் பதவி வகித்த அதிபரின் சேவைக்காலத்தை நீடிக்குமாறு அமைச்சர் அதாவுல்லா கோரினார். என்றாலும், தொழில்நுட்ப சேவையில் இல்­லாத ஒருவரை தொழில்நுட்பக்கல்லூரி அதிபராக வைத்திருப்பதில் இருக்­கின்ற கொள்கை ரீதியான முரண்பாடு தொடர்பாக அமைச்சருக்கு தெளி­வாகக்கூறினேன். அதனை அவர் ஏற்றுக்கொண்டார். அதன்பின்னர் எம்­மி­ரு­வரதும் இணக்கத்துடனேயே புதிய அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார். எவ்­வா­றிருப்பினும் முன்னர் கடமைபுரிந்த அதிபர் வழங்கிய சேவைக்காக நன்றி தெரிவிக்கின்றோம். இந்தத் தொழில்நுட்பக்கல்லூரியை கொரிய அரசாங்கத்தின் உதவியுடன் மேம்படுத்துவதற்கு நான் தெரிவு செய்துள்ளேன். அதுமட்டுமன்றி, ஜனாதிபதியின் முன்­மொழிவுக்கமைவாக எதிர்காலத்தில் பல்கலைக்கழக மட்டத்திலான தொழில்நுட்பக் கல்லூரிகளுள் ஒன்றாக இதனையும் தரமுயர்த்துவேன் என உங்­களிடம் உறுதி வழங்குகின்றேன் என்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’