பி ரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவின் சொத்து விபரங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் 11பேர் அடங்கிய நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு, இன்று கூடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க பிரதம நீதியரசருக்கு கால அவகாசம் வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் இந்த கூட்டத்தின் போது தீர்மானிக்கப்படும் என்று தெரியவருகின்றது.
குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்காக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவினால் 5 வார கால அவகாசம் கோரப்பட்டுள்ள நிலையில், நாளை வியாழக்கிழமை அவர் மீண்டும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் தோன்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’