வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 5 டிசம்பர், 2012

தமிழக மீனவர்களை விடுவிக்கவும்; பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்


இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 37பேரையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவினால் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதமொன்று எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'தமிழகம், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள், 5 மீன்பிடிப் படகுகளில் கடந்த 2ஆம் திகதி கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். இவர்களை இலங்கை கடற்படையினர் புல்மோடை அருகில் வைத்து கைது செய்துள்ளது. இவர்களை 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதுபோன்று இந்திய - இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டும், கைது செய்யப்பட்டும் வருகின்றனர். இதனால், இந்திய மீனவர்கள் பாதுகாப்பாற்ற நிலையை உணர்கின்றனர். இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள், இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்தால், இந்திய கடலோரக் காவற்படையினர், அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பிவிடுகின்றனர். இந்த விடயத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கை அரசு, தமிழக மீனவர்கள் 37 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். எனவே, இலங்கை அதிகாரிகளுடன் பேசி, உடனடியாக இந்த மீனவர்களையும், 5 படகுகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’