யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் அரசியல் வாதிகள் மற்றும் ஏனையோர் பல்கலைக்கழக பதிவாளரின் அனுமதி பெற்று செல்லவேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக வளாகத்தினை சுற்றி அமைக்கப்பட்டுள்ள காவலரண்கள் உடனே அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க இன்று தெரிவித்தார்.
யாழ். மாவட்ட பாதுகாப்பு படை தலைமையகத்தில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரியரட்ணம் உட்பட பல்கலைக்கழக பேராசிரியர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடந்து தெரிவிக்கையில்,
பல்கலைக்கழக வளாகத்திற்குள் இராணுவம் மற்றும் பொலிஸார் தேவை கருதி நுழைய வேண்டி இருந்ததே தவிர வேறு காரணங்களுக்காக அல்ல. பல்கலைக்கழக துணைவேந்தரின் வேண்டுகோளுக்கு இணங்க மருத்துவ பீட மாணவன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், பல்கலைக்கழக வளாகத்தினை சுற்றி அமைக்கப்பட்டுள்ள காவலரண்கள் உடனே நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை சுமூகமான முறையில் முன்னெடுத்துச் செல்லுமாறும், கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இனிவரும் காலங்களில் பல்கலைக்கழக வளாகத்தினுள் இராணுவமோ அரசியல்வாதிகளையோ அனுமதிக்க கூடாதென்றும், எந்த காரணம் கொண்டு இராணுவத்தினர் உள்நுழைவது தவிர்க்கப்படும்.
மாணவர்கள் விரும்பத்தகாத செயல்களை செய்த காரணத்தினால், இராணுவமும், பொலிஸாரும் இணைந்து மாணவர்களை கைது செய்ய வேண்டி சூழ்நிலை ஏற்பட்டது. மாணவர்களின் பாதுகாப்பு கருதியே அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இக்கலந்துரையாடலில், யாழ். பல்கலைக்கழக உப- துணைவேந்தர் வேல்நம்பி, உட்பட் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவபீட பீடாதிபதி, இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’