வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 4 டிசம்பர், 2012

நீதியரசர் சிராணி தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகி பதிலளிப்பு


பி ரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க தனக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றப்பிரேரணை தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது தடவையாக ஆஜராகி பதிலளித்தார்.அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா தலைமையிலான 11 உறுப்பினர்களைக் கொண்ட மேற்படி தெரிவுக்குழுவின் முன்னிலையில் பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க தனது சட்டத்தரணிகளுடன் ஆஜராகியிருந்தார்.
பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற மேற்படி விசாரணை நடவடிக்கைகளில் பிரதம நீதியரசர் இன்று காலை 10.15 மணியளவில் பாராளுமன்றத்தை வந்தடைந்தார்.குற்றப்பிரேரணை தொடர்பான பாராளுமன்ற விசாரணைகள் கடந்த மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் இதன் இரண்டாம் கட்ட விசாரணைகள் டிசம்பர் மாதம் நான்காம் திகதி இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இதன்படி இன்று நான்காம் திகதி செவ்வாய்கிழமை இரண்டாம் கட்ட விசாரணைகள் பிற்பகல் வரை நீடித்திருந்ததுடன் அடுத்த கட்ட விசாரணை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’