வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 13 டிசம்பர், 2012

சபாநாயகருக்கு சம்பந்தன் கடிதம்


நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வுகள், அமர்வின் அறிக்கைகள் எதுவும் தனக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் தெரிவுக்குழுவின் உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அவர் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிற்கு இன்று வியாழக்கிழமை கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அந்தக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வுகள், அமர்வின் அறிக்கைகள் எதுவும் டிசெம்பர் மாதம் 4 ஆம் திகதி எனக்கு கிடைக்கவில்லை என்பதை தங்களின் கவனத்துக்கு கொண்டுவருகின்றேன். டிசெம்பர் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையின் பிரதியும் எனக்கு தரப்படவில்லை. அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் அதன் வரைவோ அல்லது அறிக்கையோ எனக்கு தரப்படவில்லை. இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படினும் அது எனக்கு இன்னும் அனுப்பிவைக்கப்படவில்லை. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து அந்த அறிக்கை எனக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறும் மேற்படி ஆவணங்களை இயன்றளவு விரைவாக எனக்கு அனுப்பிவைக்க ஆவண செய்யுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’