வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 10 டிசம்பர், 2012

காணாமல்போன உறவுகளைக் கண்டறியக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்


ன்னார் மாவட்டத்தில் காணமல்போன மற்றும் கடத்தப்பட்ட உறவுகள் கண்டறியப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மன்னார் பிரஜைகள் குழு மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவை ஆகியவற்றின் அனுசரணையுடன் காணமல்போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சமாசம் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று திங்கட்கிழமை மன்னாரில் இடம்பெற்றது.
இவ்வார்ப்பாட்டப் பேரணி இன்று காலை 10 மணியளவில் மன்னார் செபஸ்ரியார் பேராலய மண்டபத்தில் விசேட கூட்டத்துடன் ஆரம்பமாகி மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் பஸார் பகுதியைச் சென்றடைந்தது. பினனர்; மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்து மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கு கையளிக்கும் முகமாக மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. இதேவேளை, காணமல்போன மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை விடுதலை செய்யும் படி கோசங்களை எழுப்பியதோடு பல வித வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த பல ஆண்டுகளாக கைது செய்யப்பட்ட, இனம் தெரியாதோர் என்ற போர்வையில் கடத்தப்பட்ட தமது உறவுகளின் இருப்பிடம் இதுவரை அறியப்பட முடியாமல் உள்ளதுடன் அவர்கள் உயிருடன் உள்ளனரா? இல்லையா? என்பது கூட இன்றுவரை மர்மமாகவே உள்ளது. எனினும் இதுவரை இவர்கள் மீள விடுவிக்கப்படவோ சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ இல்லை. இவர்களை விடுவித்து உறவினர்களிடம் ஒப்படைக்கும்படியும் அவர்களில் குற்றம் இருந்தால் சட்டத்தின் முன் நிறுத்தும்படியும் கோரி உலக மனித உரிமைகள் தினமான இன்று குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. இவ்வார்ப்பாட்டப் பேரணியில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை, உபதலைவர் அந்தோனி சகாயம், தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் சுனேஸ் சோசை, தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் அமைப்பாளர் கோமகுமார, பௌத்த குருமார்கள், அருட்தந்தையர்கள,; மன்னார் நகரசபை தலைவர், உறுப்பினர்கள், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வினோநோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன் மற்றும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் இதில் கலந்து கொண்டனர். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’