2 முறை திருமணம் செய்து கணவரை விட்டுப் பிரிந்து வந்து தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த பெண்ணின் நடத்தை மீது சந்தேகப்பட்ட நபர் அவரை கொலை செய்து விட்டார். பின்னர் போலீஸில் சரணடைந்தார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குட்டிமீட்டிப்பட்டி என்ற கிராமதைத் சேர்ந்தவர் 40 வயதான சுப்புலட்சுமி. இவருக்கு இரண்டு முறை திருமணமாகி இரண்டு கணவர்களுடனும் சேர்ந்து வாழாமல் தனித்து வந்து விட்டார். இருவரையும் அவர் விவாகரத்து செய்யவும் இல்லை.
இந்த நிலையில் மதுரை அவனியாபுரம் அருகே உள்ள தோடனேரியைச் சேர்ந்த 55 வயதான ராமகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். ராமகிருஷ்ணனும், சுப்புலட்சுமியைப் போலவே இரண்டு முறை திருமணமாகி தனித்து வாழ்ந்து வந்தவர்தானாம்.
இருவரும் திருமணம் என்று எதையும் செய்து கொள்ளாமல் சிந்தாமணி அருகே குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சுப்புலட்சுமியின் நடத்தையில் ராமகிருஷ்ணனுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதுதொடர்பாக இருவருக்குள்ளும் வாக்குவாதமும் மூண்டது. இந்த நிலையில் நேற்று இரவு சுப்புலட்சுமியைக்
கத்தியால் குத்திக் கொலை செய்தார் ராமகிருஷ்ணன். பின்னர் அவனியாபுரம் காவல் நிலையம் சென்று சரணடைந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’